காங்கேசன்துறையில், அடுத்த மாதம் உப்பு உற்பத்தி நிலையமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் நாட்டில் நூற்றுக்கு 70 சதவீதமான உப்பு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும், நாட்டில் இரண்டு உப்பு உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் எனவும் கைத்தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதோடு, இதற்காக உப்பு நிறுவனங்களை அமைக்கவுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.