தற்போதைய வறண்ட காலநிலை தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை 20 சதவீதம் குறைக்கப்பட்டிருந்தாலும், வறட்சி நிலைமை தொடருமாயின், மின் கட்டணத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.
மின்சார சபையில் எப்போதும் 140 பில்லியன் ரூபாய் இலாபம் இருப்பதாக கூறினாலும், அது முற்றிலும் பொய் என்பதுடன், ஒவ்வொரு காலாண்டிலும் விலை மாறும்போது ஒரு நிலுவை தொகை இருந்து கொண்டே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வறட்சி நிலைமை மேலும் அதிகரிக்குமாயின், நட்டமும் மேலும் அதிகரிக்கும். ஆகையால், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.