நீர்கொழும்பு – பிடிபன லெல்லம பகுதியில் ஜந்து கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மீன்களை கொண்டு செல்வதாக கூறி சந்தேக நபர்கள் இந்த கஞ்சாவை கொண்டு சென்றுள்ள நிலையில், லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் துங்கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது