தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இயக்குனர் மிஷ்கின் தனக்கென ஒரு தனியதான இடத்தை பிடித்து வைத்திருக்க கூடிய ஒரு இயக்குனராவர். பொதுவாக இயக்குனர்கள் தாம் இயக்குகின்ற திரைக்கதைகளை திரைப்படம் வெளியாவதற்கு முன் கூறெருவதற்கு பேரிதும்விரும்பமாட்டார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் விஜய் சேதுபதி , ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருகுவாகிவருகின்ற திரைப்படமான ”டிரெயின்”. குறித்து, திரைப்படத்தின் கதை இதுதான் என இயக்குனர் மிஷ்கின் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளும்போது கூறியிருப்பதுதான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
ஒரு தனியார் நிகழ்ச்சிஉயில் கலந்து கொண்ட இவர் டிரெயின் திரைப்படமானது , முற்றுமுழுதாக ஒரு ரயில் பயணத்தை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது; ஒரு ராட்சத புழு எவ்வாறு தன்னுடைய பிள்ளைகளை சுமந்துகொண்டு தவழ்ந்து தவழ்ந்து போய் பத்திரமா வெளியே விடுகிறதோ அதே போலதான் இக்கதையும் அமைந்துள்ளது, அதாவது வாழவே விருப்பமில்லாத கதாநாயகன், இறப்பை நோக்கி பயணித்து கொண்டிருக்கையில் , அந்த ரயில் பயணம் அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் திரைப்படத்தின் சுருக்கம் என அவர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு இவர் கூறியிருப்பதை ரசிகர்கள் அனைவரும் பாராட்டிவருப்பிகின்றனர். இயக்குனர் மிஷ்கின்க்கு இருக்கும் தைரியம் யாருக்கும் வராது எனவும் இத்திரைப்படம் கண்டிப்பாக பீல் குட் படமாக அமையும் எனவும் வாழ்த்தியுள்ளனர் .