இன்றைய ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசஸ் ஹைதரபாத் அணிகள் மோதவுள்ளன.
தனது முதல் ஆட்டத்தில் டெல்லியை பந்தாடிய லக்னோ அணி, 2ஆவது ஆட்டத்தில் சென்னையிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் உள்ள லக்னோ அணிக்கு தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் வருகை தந்திருப்பது மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் விளையாடாமலிருந்த நிலையில், தற்பொழுது, இப்போது அவர் அணியுடன் இணைந்துள்ளார்.
அத்துடன் ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜேன்சன் ஆகிய தென்ஆப்பிரிக்க வீரர்களும் சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டு வருகைதந்துள்ளனர். முன்னிலையில் இருக்கும் லக்னோவை சாய்த்து ஐதராபாத் வெற்றிக் கணக்கை தொடங்குமா? என்பதே எதிர்பார்ப்பாகும்.