சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஹஆர்எஸ்எப் என்ற துணை இராணுவ படை ஈடுபட்டு வருகிறது.
இதனால் கார்டூமில் இராணுவத்துக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக மூண்டது. இந்நிலையில் குறித்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 200ஆக தற்பொழுது உயர்வடைந்துள்ளது.
1,800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடானில் இடம்பெற்றுவரும் இந்த போர் வன்முறை சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை சூடான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.