இலங்கையில் பால்மாவை ஏற்றுமதி செய்யும் பிரதான நிறுவனங்கள் பால்மா விலையை மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை எதிர்காலத்தில் வர்த்தக அமைச்சுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார்.