ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின.
நாணயசுழற்சியிவல் வென்ற பெங்களுரு அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் அணித்தலைவர் டூ பிளசிஸ் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். விராட் கோலி 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டூ பிளசிஸ் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார்.
மறுமுனையில் அனுஜ் ராவத் 9 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், பிரபுதேசாய் 6 ரன்னிலும் தோல்வியுற்றனர். 15.2 ஓவர்களில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. டூ பிளசிஸ் 44 ரன்களில் அவுட் ஆக இவரைத் தொடர்ந்து களமிறங்கிய லாம்ரோர் 3 ரன்களும், தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் தங்களது விக்கெட்டை பறிக்கொடுக்க பெங்களுரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 126 ரன்களை எடுத்தது.