ஐ.பி.எல் தொடரின் 46ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் ஓவரை நாலாபுறமும் விளாசினர்.
இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன் அணியின் அணித்தலைவர் ரோகித் சர்மா டக் அவுட்டில் வெளியேறினார்.
அதனையடுத்து நிதானமாக ஆடிய மும்பை அணி போக போக அதிரடியாக விளையாடி போட்டியை 18.5 ஓவரில் சேசிங் செய்தனர். இதனால் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
214 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் மொகாலியில் அதிக ரன்களை சேசிங் செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.