ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஹொக்கி அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.
இதில் இந்தியா-அவுஸ்திரேலியா பெண்கள் ஹொக்கி அணிகள் இடையிலான முதலாவது போட்டி அடிலெய்டில் நேற்று இடம்பெற்றது.
பரபரப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவை வீழ்த்தியது.
அவுஸ்திரேலிய அணியில் ஐஸ்லிங் உட்ரி 21-வது நிமிடத்திலும், மாட்டி பிட்ஸ்பாட்ரிக் 27-வது நிமிடத்திலும், அலிஸ் அர்னோட் 32-வது நிமிடத்திலும், கோர்ட்னி ஸ்கோனெல் 35-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் சஞ்சிதா குமாரி (29-வது நிமிடம்), ஷர்மிளா தேவி (40-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இதே மைதானத்தில் இன்று (20) நடக்கின்றது.