நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று காத்மாண்டு நகரின் திருபுவன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்ற போது, நடுவானில் எதிர்பாராதவிதமாக ஒரு பறவை விமானம் மீது மோதியுள்ளது.
இதன் காரணமாக விமானத்தின் வலதுபுற இறக்கை சேதமடைந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
அதைத்தொடர்ந்து அந்த விமானம் திருபுவன் விமான நிலையத்திற்கு மீண்டும் திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதோடு விமானத்தின் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டுள்ளனர்..