(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
Nothing நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மொடலான Phone 2 வெளியீடுக்கு தயாராகி உள்ளது.
Oneplus நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் தனியாக தொடங்கியுள்ள Nothing நிறுவனம் அதன் புதிய Phone 2 ஸ்மார்ட்போனை எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தய ஜெனரேஷன் போனான Nothing 1 ஸ்மார்ட்போனை விட கூடுதல் பேட்டரி, சிப் மற்றும் கேமரா திறன் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த போனில் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில் இப்போது இந்த போன் ஒரு மிகப்பெரிய 4700mAh பேட்டரி வசதி கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
Nothing Phone 1 வேரியண்ட் 4500mAh பேட்டரி, Qualcomm Snapdragon 778+ 5G சிப் கொண்டிருந்தது. இந்த புதிய போனின் டிசைன் பொறுத்தவரை தற்போது இருக்கும் Phone 1 போன்றே Glyph டிசைன், பேக் பேனல், LED இண்டிகேட்டர் போன்ற வசதிகள் கொண்டிருக்கும்.
இன்னும் வரும் வாரங்களில் இந்த போன் பற்றிய மேலும் விவரங்கள் வெளியாகும். மிகமுக்கிய அம்சமாக இதன் கேமரா திறன் மேம்படுத்தப்படும் என்றும், போட்டியாளர்களுக்கு நிகரான OS இல்லை என்றாலும் தொடர்ந்து அதில் வேலை செய்துவருவதாக Nothing நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், அவரது உடலை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு திரண்டுள்ளனர். அத்துடன் அவரது பாதத்தையும் தொட்டு வணங்கினார்கள். இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.