NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு…!

பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles