(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுகயீனமுற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர்களுக்கு மங்கி பொக்ஸ் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.