86 வயது நிரம்பிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தாங்க முடியாத வலியின் காரணமாக நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்க்கு குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த 2021ல் ஜூலை 4ம் திகதி போப் பிரான்சிற்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதுடன், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுத்த போப் பிரான்சிஸ் அதன்பிறகு தனது பணியை தொடங்கி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.