(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கடந்த வாரம் 255 சிபெட்கோ பெற்றோல் நிலையங்கள் தேவையான குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்பதுடன், சில பகுதிகளில் பெற்றோல் நிலையங்கள் அருகே வரிசைகள் அமைக்கப்பட்டமை குறித்தும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.