NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய அணியின் தீர்மானம் too much: ஹர்பஜன் சிங் வெளிப்படைக் கருத்து

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் இந்திய அணி, நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதனால் தற்பொழுது நடைபெறும் போட்டி, இந்தியாவிற்கு இழந்த நற்பெயரை மீட்கும் ஒரு அரிய வாய்ப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போதைய இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 469 ரன்கள் குவிக்க, பிறகு பேட்டிங் செய்து வரும் இந்தியா சொற்ப ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளதால் ரசிகர்களும் விமர்சகர்களும் பல விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பங்கேற்று விளையாடிய சாதனையாளருமான ஹர்பஜன் சிங் இந்த போட்டி குறித்து பேசுகையில்,

ஒரு உலகக் கோப்பை போட்டியில் விளையாட தேவைப்படும் மன உறுதியும், தைரியமும் இந்திய அணி வெளிப்படுத்த தவறி விட்டது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடச் சென்றதும் சற்று அதீதமானது. ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம், அணித்தேர்வுக்கு முன் முதல் நாள் சூழ்நிலையை கணக்கில் கொண்டு தெர்வு செய்திருக்கலாம்.

நம்முடைய வீரர்களின் திறனில் குறை இல்லை. ஆனால், அவர்கள் இன்னும் அதிகளவில் பெரிய கோப்பைகளுக்கான விளையாட்டில் பயமோ, கவலையோ இன்றி ஆடப் பழக வேண்டும். இப்பொழுது வீரர்கள், அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களால் இயல்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த இயலவில்லை.

ஆட்டத்தின் முடிவை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக விளையாட வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும். வீரர்களுக்கு அவர்களின் இயல்பான விளையாட்டை ஆடுவதற்கு ஊக்கமளிக்கப் பட வேண்டும். அணி தோல்வியடைந்தால், தாம் உடனே வெளியேற்றப்படுவோம் என்ற வகையில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்ந்து விடும்.

மாறாக அவர்கள் தங்களின் திறமையை முழுதும் வெளிக்கொண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை காண்பித்தால் போதும் என ஊக்குவிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles