NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் விடுதியொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐவர் கைது…!

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு தாய்லாந்து பெண்கள் உட்பட முன்னாள் இராணுவ அதிகாரியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரியொருவர் சிவில் உடையுடன் 10,000 ரூபாவிற்கு பெண் ஒருவரை விலைக்கு வாங்கி விடுதிக்குள் நுழைந்த பின்னரே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் தாய்லாந்து பெண்கள் இருவரிடமும் கடவுச்சீட்டு இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடுதியின் உரிமையாளரான 24 வயதுடைய இலங்கை பெண் சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இந்த விடுதியின் மூலம் சம்பாதித்துள்ளதாகவும், இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான இராணுவ அதிகாரி சுகயீனமுற்றிருந்ததாகக் தெரிவிக்கப்பட்டதால் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு தாய்லாந்து தூதரகத்தின் ஊடாக மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles