NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலனுக்கு பயந்து குகைக்குள் இரவைக் கழித்த சிறுமி…!

மொனராகலை – தொம்பகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் குகைக்குள் பதுங்கியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 வயதுடைய சிறுமி காதலனுக்கு அஞ்சி காட்டுப்பகுதிக்கு சென்ற குகையில் தனியாக இரவைக் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி வீட்டிற்கு வந்த அவரது காதலன் சிறுமியையும் அவரது தாயையும் அச்சுறுத்தியதாகவும், இதனால் இவ்வாறு சிறுமி அங்கு சென்று ஒழிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குகைக்குள் இரவைக் கழித்த சிறுமி, பசி தாங்க முடியாமல் மறுநாள் வீடு திரும்பியதாகவும், யாராலும் துன்புறுத்தப்படவில்லை என்றும் சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் தனது மகள் காணாமல் போனதாக தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தொம்பகஹாவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். 

Share:

Related Articles