NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைப்பு?

முட்டை ஒன்றின் விலையை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோதுமை மா இறக்குமதியை நிறுத்தாமல் ஒரு கிலோ மாவின் விலையை 180 முதல் 170 ரூபா வரை குறைத்திருந்தால், பாண் ஒன்றின் விலை 10 ரூபாவுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles