NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாமன்னன் திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் ‘மாமன்னன்’ படம் June29ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாமன்னன் படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி OSD Filims நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள Angel எனும் திரைப்படம் 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள 20 சதவீத பட சூட்டிங்கிற்கு, ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles