(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
Oceangate மீது தவறான மரணம் மற்றும் அலட்சிய போக்கு தொடர்பில் வழக்கு பதிவு செய்யமுடியுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த பயணித்தில் டைட்டன் பயணிகள் கையொப்பமிட்ட நிபந்தனைகள் உள்ளிட்ட காரணங்களால், இந்த பயணத்தில் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையின் காரணமாக, அந்நிறுவனத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வொஷிங்டன் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியரான தோமஸ் ஸ்கொன்பாம், ‘அசோசியேட்டட் பிரஸ்ஸிடம்’ இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 1993ஆம் ஆண்டின் பயணிகள் கப்பல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஓஷன்கேட் நிறுவனம் பின்விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும். 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பனியின் நிறைவேற்று பணிப்பாளராக ஸ்டொக்கோம் ரஷ் விளங்கினார். டைட்டானிக்கிற்கு டைவ் செய்வதற்கு வழிவகுத்த ஓஷன்கேட் நிறுவனம் பஹாமாஸில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க சட்டத்தைத் தவிர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்கள் சில சமயங்களில் ‘கார்ப்பரேட் முகத்திரையைத் துளைத்துள்ளன’ ஆகையால், ஓஷன்கேட் நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புக் கூறப்படலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.