NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2022 ஆம் ஆண்டுக்குரிய உயர் தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2022 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

மேலும் இந்தப் பரீட்சைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூர் நடனம், பரதநாட்டியம் மற்றும்; சங்கீத நடைமுறைத் பரீட்சைகள் இன்று முதல் ஜூலை 6 ஆம் திகதி வரையிலும், பொறியியல் தொழில்நுட்ப நடைமுறைத் பரீட்சைகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஜூலை 21 ஆம் திகதி வரையிலும், உயிரியல் தொழில்நுட்பத்திற்கான நடைமுறைத் பரீட்சைகள்; ஜூலை 29 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் குறித்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அவற்றை தபால் மூலம் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு பெற்றுக் கொள்வதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் ழடெiநெநஒயஅள.பழஎ.டம என்ற இணையத்தளத்திற்குச் சென்று அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னர் வழங்கப்பட்ட அனுமதி அட்டைகள் செல்லுபடியாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பான தெளிவுபடுத்தல்கள் அல்லது தகவல்களுக்கு மாணவர்கள் 1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 0112 784 208, 0112 784 537, 0112 786 616 அல்லது 0112 785 922 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகவோ அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Related Articles