(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாராளுமன்றம் ஜூலை முதலாம் திகதி கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் 16 நிலையியல் கட்டளை சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றம் ஜூலை முதலாம்; திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கூடும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.