(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கும் 4 பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்தியரும் நிபுணருமான சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
விபத்து தடுப்பு மற்றும் முதலுதவி குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கும் செயலமர்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விபத்துக்களால் நாட்டில் வருடாந்தம் 10,000 தொடக்கம் 12,000 பேர் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.