NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கமலின் 234 படத்தில் சிம்பு நடிக்கவில்லையா?

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை நோக்கி வருகிறது. இதையடுத்து கமலின் 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சிம்பு மணிரத்னம் படத்தில் நடிக்க ஒரு சிக்கல் வந்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம் தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்கும் சிம்பு தாடி வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால் மணிரத்னம் படத்தின் கதாபாத்திரத்தில் சிம்பு தாடி உடன் இருக்கக்கூடாதாம். இதனால் தற்போது இந்த கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

Share:

Related Articles