ஹராரேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஓமன் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை பெய்ததால் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 362 ஓட்டங்களைக் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதையடுத்து, 363 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது.
ஓமன் அணியின் அயான் கான் மட்டும் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 105 ஓட்டங்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் ஓமன் அணி 48 ஓவரில் 246 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.