(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் இந்த உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் வன்சேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய விமானத்தினூடாக கொழும்பிலிருந்து ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும் எனவும், குறித்த விமான சேவை செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணத்திற்குப் பயணி ஒருவருக்கான ஒருவழி கட்டணமாக 22,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 41,500 ரூபாவும் அறிவிடப்படுகின்றது.