NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்பஹா – அத்தனகலு ஓயாவில் விழுந்த யுவதி சடலமாக மீட்பு…!

கம்பஹா – அத்தனகலு ஓயாவில் விழுந்து காணாமல் போன யுவதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரோடையில் விழுந்த யுவதியின் உடல் சுமார் 500 மீட்டர் தொலைவிலிருந்து கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் அத்தனகலு ஓயாவில் நீர்மானி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் செல்பி புகைப்படம் எடுக்கச் சென்ற இந்த யுவதி, நீரில் விழுந்து காணாமல் போயிருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles