NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டிலுள்ள சுமார் 89,000 குடும்பங்களுக்கு, குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாலேயே இந்த சிக்கல் நிலைமைய ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை நீடிக்காவிட்டால், இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே விவசாயத்திற்கு நீரை வழங்க முடியும் என்றும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக உடவலவ நீர்த்தேக்கம் காணப்படுகின்றது. இதன்மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை 89,000 ஐ கடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 25,000 300 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும், சுமார் 36,000 விவசாயக் குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles