(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்த ஆண்டு மக்கா மற்றும் மதீனாவில் ஹஜ் யாத்திரையின் போது மூன்று இலங்கை யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவையை சேர்ந்த பெண் யாத்திரிகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக மக்காவில் காலமானதுடன், கொழும்பைச் சேர்ந்த ஆண் யாத்திரிகர் மதீனாவில் விபத்து காரணமாக உயிரிழந்ததுடன், குருநாகலைச் சேர்ந்த ஆண் யாத்திரிகர் ஒருவர் மாரடைப்பால் மக்காவில் காலமானாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று பேரினதும் இறுதி சடங்குகளும் சவுதி அரேபியாவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக 3,000 இலங்கையர்கள் சென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.