2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் டோனி.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் கடந்து பிறகு கூட இன்றும் டோனியின் மீதான அன்பு குறையவில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் டோனியை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் டோனி நாளை தனது 42வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை இன்றிருந்தே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
ஐதராபாத்தில் டோனிக்கு 52 அடியில் முழு நீல கட் அவுட் வைத்து கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.