பல ஆண்டுகளாக டிவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார்.
சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று டிவிட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு தேவையற்ற பதிவுகளை குறைக்கவும், தரவுகள் வீணாவதை குறைக்கும் வகையிலும் டிவிட்டர் பதிவுகளை பார்க்க மஸ்க் அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்து வந்தார்.
இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிதாக திரெட்ஸ் (Threads) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய செயலிகளை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வரும் சூழலில், டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்குவதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 7 மணித்தியாலங்களில் 10 மில்லியன் பேர் இதனை install செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.