நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ஆயிரத்து 476 ரூபாவாகவும் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 50 கிலோகிராம், உள்ளூர் உற்பத்தி சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் இந்த விலை குறைப்புக்கு இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2 ஆயிரத்து 600 ரூபாவுக்கு விற்பனையாகும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 2 ஆயிரத்து 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.





