(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகஸ்தோட்டை அம்மன் ஆலயத்தின் உண்டியல்; மற்றும் ஆபரணங்களை நேற்று (08) இரவு சிலர் திருடிச் சென்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஆலய வருடாந்த உற்சவம் நிறைவடைந்த நிலையில், இவ்வருடமும் வருடாந்த உற்சவம் (08) முடிந்து சில நாட்களில் பிரதான வாசல் மற்றும் பின் வாசல் என்பனவற்றில் உண்டியல் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோவில் ஆலய பரிபாலன சபையினர், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து, நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உத்தியோகப்பூர்வ நாய் பிரிவின் உதவியுடன் நேற்று (09) காலை ஆலய இடத்தைச் சூழவுள்ள பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருடப்பட்ட உண்டியல் கோவிலுக்கு அருகிலுள்ள தேயிலை காட்டில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுன், உண்டியலிலும் கோயிலின் உள்ளேயும் கைரேகைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் கொள்ளையிட்ட நபர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.