NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Twitter’ல் உள்ளவை Thread’ல் இல்லையே !

மெடா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள Thread Appல் Twitterல் இருப்பது போன்று ஒரு சில அம்சங்கள் இடம்பெறவில்லை.

Thread Appல் ஹேஷ்டேக் இல்லை

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற மெட்டாவின் பிற சமூக ஊடக தளங்கள் பல ஆண்டுகளாக ஹேஷ்டேக் ஆதரவைக் கொண்டுள்ளன. அதனால் வரும் நாட்களில் த்ரெட்களும் அதைப் பெற வாய்ப்புள்ளது.

வெப் வெர்ஷன் இல்லை

ட்விட்டரை எந்த வெப் ப்ரௌசரிலும் பயன்படுத்த முடியும். த்ரெட்ஸ் தற்போது செயலியாக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம், Threads.net இருந்த போதிலும், அது ஆப்-ஆக டவுன்லோடு செய்ய மட்டும் அனுமதிக்கிறது.

எடிட் வசதி இல்லை

ட்விட்டர் சமீபத்தில் அதன் பிரீமியம் பயனர்களுக்கு ட்வீட்களை எடிட் செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது. தற்சமயம், த்ரெட்ஸ் போஸ்ட் எடிட் செய்யும் வசதி கொண்டு வரவில்லை.

DM ஆப்ஷன் இல்லை

த்ரெட்ஸ் செயலியில் டிரெக்ட் மெசேஜ் (DM) என்ற ஆப்ஷன் இல்லை. அதோடு சமீபத்தில் தான் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை கொண்டுவந்தது. த்ரெட்ஸ் பயனர் தனியாக மற்றொருவருக்கு மெசேஜ் செய்ய முடியாது.

ட்ரெண்டிங் செக்ஷன் இல்லை

ட்விட்டரில் நடக்கும் செய்திகளைக் கண்டறிவதற்கான எளிதான வழிகளில் டிரெண்டிங் செக்ஷன் மிகவும் பிரபலமானதாகும். த்ரெட்ஸில் இந்த ட்ரெண்டிங் செக்ஷன் இல்லை. தி வெர்ஜ் உடனான ஒரு உரையாடலில், இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், த்ரெட்ஸ் “ஹார்ட் நியூஸ்” க்கான தளம் இல்லை. அதனால் இது இப்போதைக்கு டிரெண்டிங் டாப்பிக் செக்ஷன் பெற வாய்ப்பில்லை என்றார்.

விளம்பரங்கள் இல்லை

இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், ட்விட்டர் தற்போது விளம்பரங்களால் நிரம்பி வழிகிறது. த்ரெட்ஸ் 1 பில்லியன் பயனர்களைப் பெறும் வரை விளம்பரங்கள் பெறாது என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

Can’t embed Threads post

Embed அம்சம் குறிப்பாக செய்தி நிறுவனங்களில் பயனுள்ளதாக உள்ளது. ட்விட்டர் நீண்ட காலமாக இந்த அம்சத்தை வழங்கி வருகிறது. த்ரெட்ஸ் செயலில் இது இல்லை. த்ரெட்ஸ் பதிவை Embed செய்ய அனுமதிக்கவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles