(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொதுத்தராதர சாதாரணதர, உயர்தர மற்றும் ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை அடுத்த வருடம் குறித்த நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை நேரங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.