NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் என்ன?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பேராதனை போதனா வைத்தியசாலையில் யுவதியொருவரின் மரணம், அவர் பெற்றுக்கொண்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அஜீரணக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளரரும் வைத்தியருமான, அர்ஜுன திலகரத்ன விளக்கமளிக்கையில், ‘செஃப்ட்ரியாக்ஸோன்’ மருந்து என்பது ஒரு நாளுக்கு ஒரு முறை 2அப அளவுகளில் செலுத்தப்படும் ஒரு அண்டிபயாடிக் ஆகும்.

‘மருந்துக்கான காரணத்தை உறுதியாகக் கூறுவது சவாலானதாக இருந்தாலும், அது ஒரு ஒவ்வாமை எதிர்வினையாகத் தோன்றுகிறது. நாங்கள் 2,700 டோஸ் செஃப்ட்ரியாக்ஸோனை ஏனைய நோயாளிகளுக்கு எந்த அசம்பாவிதமும் இன்றி வழங்கியுள்ளோம்’ என விளக்கமளித்துள்ளார்.

இளம் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணையை அடுத்து கண்டி நீதவான் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பின் ஒரு பகுதியாக, சிறுமியின் உடல் மாதிரிகளை மேலதிக பரிசோதனை மற்றும் விரிவான அறிக்கைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share:

Related Articles