(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கண்டியைச் சேர்ந்த 34 வயதான இவர் ஜூலை 2 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.