NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டுவிட்டர் நஷ்டத்தில் உள்ளது : புலம்பும் எலான் மஸ்க்

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டரில் இலாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. இதனால் டுவிட்டர் இன்னும் பணத்தை இழக்கிறது. நாங்கள் நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles