NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலியாவில் மர்ம பொருள் கரையொதுக்கம் : சந்திராயன் – 3 எரிந்து விழுந்துள்ளதாக சந்தேகம் !

அவுஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரவித்துள்ளன.

குறித்த பொருள் பெரிய அளவிலான உலோக பாகம் போன்று தென்படுவதாகவும் இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அதனை பார்வையிட்டுள்ளனர். மேலும் குறித்த பொருள் தொடர்பில் உறுப்பதிய தகவல்கள் எதுவும் இல்லை என்பதால் குறித்த அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது,

மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம். மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு பொலிசார் கேட்டுக்ககொண்டுள்ளனர்.

குறித்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளதாகவும் ராக்கெட் பாகம் போன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles