NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புற்றுநோய் செல்களை கண்டறிய முடியுமா ?

புற்றுநோய் செல்கள் எவ்வாறு உருவாகின்றன, புற்று நோய்க்கான மருந்துகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை எளிமையாக கண்டறியும் வகையில் ஒரு எளிமையான ஸ்கேனிங் வசதியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்மையில் ஐரோப்பிய மருத்துவர்கள் கண்டறிந்துள்ள ஸ்கேன் வசதி கேன்சர் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் வண்ணம் அமைந்துள்ளது.

2018ல் ஹெம்ஹோல்ட்ஸ் முனிச் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலி எர்டர்க் (Ali Ertürk) இறந்த எலிக்குள் ஒளி உட்புகும் வகையில் அதாவது ட்ரான்ஸ்பேரன்ட் ஆக மாற்றி ஆராய்ச்சியில் ஈடுபடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த முயற்சியில் அவரது குழுவினர் ஒன்றிணைந்து சில அமிலங்களை பயன்படுத்தி எலியின் உடலை கண்ணாடி போல் ட்ரான்ஸ்பேரன்டாக்கி குறிப்பிட்ட தசைகளை மிக துல்லியமாக ஆராயும் பணியில் இறங்கியுள்ளனர். அதாவது, இறந்த எலியில் உள்ள கொழுப்புகளையும் நிறமிகளையும் சில அமிலங்களை கொண்டு நீக்கி, சில புற்றுநோய் செல்களை உட்புகுத்தி பின்னர் பிளாஸ்டிக் பொம்மையை போல் காட்சியளிக்கும் எலியை ஆய்வில் உட்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய ஸ்கேனிங் முறையானது பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கப்போகிறது எனவும் பேராசிரியரின் குழு குறிப்பிடுகின்றனர். இதனை பிரிட்டனைச் சேர்ந்த கேன்சர் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்களும் ஆமோதித்துள்ளனர்.

இதற்கு காரணம். இறந்த ட்ரான்ஸ்பேரன்ட் எலியை ஸ்கேன் செய்ததில் ஆரம்ப கட்டத்தில் இருந்த புற்றுநோய் தசைகளை பேராசிரியர்கள் குழுவால் கண்டறிய முடிந்ததே ஆகும்.

MRI மற்றும் PET ஸ்கேன்களில் இவ்வாறு துல்லியமாக கேன்சரின் சிறு செல்களை கண்டறிய முடியாத நிலையில் இந்த ட்ரான்ஸ்பரண்ட் எலி ஸ்கேனில் ஆரம்ப கால சிறு கேன்சர் செல்லையும் கண்டறிய முடிந்தது மருத்துவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறது என்றே கூறலாம்.

எலியின் மீதான இந்த ட்ரான்ஸ்பேரன்ட் ஸ்கேனிங் முறை, புற்றுநோய் செல்கள் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளன, புற்றுநோய்க்கான சிகிச்சை மருந்துகளுக்கு அந்த செல்கள் எவ்வாறு ரியாக்ட் செய்கின்றன என்பன போன்ற விவரங்களை துல்லியமாக கண்டறிய உதவுவது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, எந்த ஒரு மருந்தும் எலியின் மீது பரிசோதிக்கப்பட்ட பின்னரே மனிதர்களுக்கு அளிக்கவல்லது என அங்கீகரிக்கப்படும் நிலையில் புற்றுநோய்க்கான மருந்துகளையும் இவ்வாறு ட்ரான்ஸ்பேரன்ட் எலி மீது பரிசோதிப்பது பெரும் முன்னேற்றத்தை எட்ட முடியும் எனமருத்துவர்கள் நம்புகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles