மென்பொருள் துறையில் ‘புரோகிராமிங்’ அல்லது ‘கோடிங்’ எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட் மோஸ்டாக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் செய்ய வேண்டிய மென்பொருள் வேலைகளை அந்நாடுகள் நாடுகளுக்கு வழங்குகின்றன.
”அவுட்சோர்ஸிங் எனப்படும் இந்த முறையில் இங்குள்ள பணியாளர்களின் ஊதிய விகிதம் அங்குள்ளவர்களை விட பெருமளவு குறைவாக இருப்பதால் அங்குள்ள நிறுவனங்களுக்கு இதனால் பெரும் இலாபம் கிடைத்து வந்தது.
தற்போது இந்த துறையில் உள்ள பல பணிகளை செயற்கை நுண்ணறிவை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.
இதனால் பெரும்பாலான வேலைகள் அழிந்து விடும் என்றும் குறிப்பாக ‘கோடர்கள் (Coders)’ அல்லது ‘புரோகிராமர்கள்(Programmers)’ தங்கள் வேலையை இழக்க நேரிடும்” என எமட் தெரிவித்துள்ளார்.