NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இத்தாலியில் கொளுத்தும் வெப்பம் : வரிசைகளில் இருந்து நீர் அருந்தும் மக்கள் !

இத்தாலியின் தலைநகர் ரோமில் வெப்பநிலை அதிகரித்துள்ளதன் காரணமாக அந்நாட்டு மக்கள் வரிசைகளில் நின்று நீர் அருந்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அனல்காற்று வீசக் கூடும் எனவும் வெப்ப அலை அடிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தாலும், ரோம் மற்றும் மிலன் நகருக்கு சுற்றுலா வந்த மக்கள் கையில் குடை மற்றும் தலையில் தொப்பியுடன் சுற்றுப் பயணங்களைத் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் அதிகிரித்துள்ளது.

இத்தாலியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில் மக்களுக்கு, மக்கள் பாதுகாப்பு குழு சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

மேலும் வயோதிபர்கள், நோயாளிகள் மற்றும் செல்லப்பிராணிகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க சுகாதார அமைச்சு 10 பரிந்துரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles