(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியா – ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று (20) அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் இது 3.3 ரிச்டராக பதிவாகியுள்ளது.