NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் ஆண்டனியின் “கொலை” படம் எப்படி இருக்கு?

“விஜய் ஆண்டனி”. ‘நான்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன.

பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இயக்கினார். விஜய் ஆண்டனியின் நடிப்பு ஒரே மாதிரி இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக பிச்சைக்காரன் 2 படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.

பிச்சைக்காரன் 2 படத்துக்கு பிறகு அவர் பாலாஜி “K.குமார்” இயக்கத்தில் கொலை படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் கொலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் Twitterல் பதிவிட்டுவருகின்றனர்.

கொலை படம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனியை இப்படி ஒரு அவதாரத்தில் பார்த்ததில்லை. இசையும் அருமையாக இருக்கின்றன, கொலையை விசாரிக்கும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன, படம் முழுவதும் விஜய் ஆண்டனி நிதானமாக இருக்கிறார் என பலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles