OTT தளங்களில் பிரபலம் ஆகி வரும் Manoj Bajpai, Pankaj Tripathi, Fazath Fazil வரிசையில் தமிழ் சினிமாவில் யார் என்ற கேள்விக்கு விடை தேடினால், முதலில் அகப்படுகிறார் விஜய் சேதுபதி.
கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமா மிகப்பெரிய இழப்பை சந்திக்காமல் உயிர்ப்புடன் இருக்க காரணம் OTT தளங்கள். முதலில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க மாற்று வழியாகத்தான் OTT தளங்களின் பக்கம் கவனத்தை திருப்பினர் தமிழ் சினிமாத் துறையினர். ஆனால், தற்போது தியேட்டர் திறக்கப்பட்டாலும், பெரும்பான்மையான படங்கள்OTTயையே நாடியுள்ளன.
கடந்த ஆண்டே Medium பட்ஜெட்டில் தயாரான விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ OTT களம் கண்டது.
தெலுங்கு படமான ‘உப்பென்னா’வில் மிரட்டல் வில்லத்தனத்தை வெளிப்படுத்திய விஜய் சேதுபதியை ஒட்டுமொத்த தெலுங்கு தேசத்துக்கும் பிடித்துப்போனது. இந்தப் படம் தியேட்டர் வெளியீடாக இருந்தாலும், சில வாரங்களிலேயே OTT பக்கம் வந்துவிட, பட்டிதொட்டியெங்கும் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் சென்றுசேர்ந்தது.
அறிமுக இயக்குநர் “தில்லி பிரசாத் தீனதயாளன்” இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார்.
அரசியல் நையாண்டி வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதலில் “Amazone OTT தளத்தில் நேரடியாக வெளியாக இருந்த நிலையில், தொலைக்காட்சி உரிமை Sun டிவியிடம் இருந்ததால்,Sun டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பின்பு OTTயில் ரிலீசாக இருக்கிறது.