NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி மீது புகையிரதம் மோதி 8 பேர் பலி

தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று புகையிரத தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் 3 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles