விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷ்யா நிலவை ஆராய்வதற்காக ‘லூனா-25’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது.
இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு விண்கலத்தை இன்று ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற விண்கலம் மூலம் அனுப்பியுள்ளது. 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை லூனா-25 விண்கலம் அடையும் என்றும் பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் விண்கலமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது.
இதற்காக மூன்று இடங்களை ரஷ்யா விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர். கடந்த 1976ஆம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது.
நிலவின் பாதைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று லூனா-25 ஆய்வு செய்யும். சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.