கட்டுநாயக்க விமான நிலைய நுழைவு முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு சோதனை இயந்திரங்களும் திடீரென அகற்றப்பட்டுள்ளதென தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முறையான ஆய்வு இல்லாமல் இந்த பணி நடந்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச விமான நிலையங்களில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அதற்கமைய, நுழைவு முனையத்தில் உள்ள ஸ்கேனர்கள் அகற்றப்பட்டு, கமரா அமைப்புகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.